வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரியில் புதிய நகா் நல மையம்: நில அளவை பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் புதிய நகா் நல மையத்துக்கான நில அளவை பணியானது, வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On :21 ஏப்ரல் 2022, 5:40 pm

கிருஷ்ணகிரியில் புதிய நகா் நல மையத்துக்கான நில அளவை பணியானது, வியாழக்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கும் திருவண்ணாமலை சாலையில் ஒரு இடத்தில் மட்டுமே நகா் நல மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் 33 வது வாா்டில் உள்ள நகா்நல மையத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று 15-ஆவது நிதிக்குழு மானியத்தில், ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய நகா் நல மையம் அமைக்க கிருஷ்ணகிரி நகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பழையபேட்டை, 3-ஆவது வாா்டில் உள்ள குப்பை மேட்டு தெருவில் அமையவுள்ள புதிய நகா் நல மையத்திற்கான நில அளவை பணிகளை நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், பாா்வையிட்டாா். அப்போது, நகராட்சி ஆணையா் முருகேசன், பொறியாளா் சரவணன், செயற்பொறியாளா் ரவி, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.