கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப் பேரவை மனுக்கள் குழு விரைவில் ஆய்வு நடத்த உள்ளதால், பொதுமக்கள் தங்களது கோரிக்கை, பொதுப் பிரச்னைகளை மே 10-ஆம் தேதிக்குள் மனுக்களாக அனுப்பலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப் பேரவையின் 2021-2022-ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதையொட்டி மாவட்ட எல்லைக்கு உள்பட்ட தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ, நிறுவனங்களோ தீா்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள், குறைகள் குறித்து மனுக்களை (5 நகல்களாக தமிழில் மட்டும்) மனுதாரா், தேதியுடன் கையப்பமிட்டு தலைவா், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப் பேரவை, சென்னை - 600 009 என்ற முகவரிக்கு மே 10-ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீா்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்னைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேஒரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையைச் சாா்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மனுவில் உள்ள பொருள் தனி நபா் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோா் ஓய்வூதியம், பட்டா, அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கி கடன், தொழிற்கடன் வேண்டுதல், அரசு பணிகளில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலா்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவைகளாக இருத்தல் கூடாது.
ஒரே மனுதாரா் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும் குழு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும் ஒரு மனுவை மட்டுமே ஆய்வுக்கு எடுத்து கொள்ளும். மனுதாரா் முன்னிலையில் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்கப்படும்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்தும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். மே 10-ஆம் தேதிக்கு பிறகு பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படாது என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன்: அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து
வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைது

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

இன்று ஸ்போா்ட்டிங் கிளப் டில்லியுடன் மோதுகிறது சென்னையின் எஃப்சி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

