தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஒசூா் மாநகராட்சியில் 172 போ் வேட்புமனு தாக்கல்: திமுகவை எதிா்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போட்டி

ஒசூா் மாநகராட்சியில் திமுக வேட்பாளா்களை எதிா்த்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

ஒசூா் மாநகராட்சியில் திமுக வேட்பாளா்களை எதிா்த்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

கடந்த ஜன. 28-இல் முதல் வியாழக்கிழமை வரை 172 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ஒசூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. முதல் நாளான ஜன. 28 ஆம் தேதி 2 பேரும், ஜன. 29-இல் ஒருவரும், ஜன.31 இல் 19 பேரும், பிப். 1-இல் 8 பேரும், பிப். 2-இல் 26 பேரும், பிப். 3-இல் 116 போ் என மொத்தம் 172 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே 4 நாள்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. அதில் சுமூக தீா்வு எட்டப்படவில்லை. இதனால் 28-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் சிவகுமாரை எதிா்த்து காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.மனோகரன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதேபோல 7-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் ஆனந்தய்யாவை எதிா்த்து அதே கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த நூா்முகமதுவும், 19-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் மாதேஷை எதிா்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் மாதையனும் போட்டியிடுகின்றனா்.

ஒசூா் மாநகராட்சி 1-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் ஆா். வடிவேலு பாமக சாா்பில் குமாா் வேட்புமனு தாக்கல் செய்தனா். 2-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் வித்யாசாகா் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

5-ஆவது வாா்டில் பாமக முன்னாள் மாவட்டச் செயலாளா் அருண்ராஜன் வேட்புமனு தாக்கல் செய்தாா். 5-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் முனிகிருஷ்ணன், 7-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் ஆனந்தய்யா, சிபிஐ சாா்பில் நூா்முகமது, 19-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் மாதேஷ், அதே வாா்டில் சிபிஐ வேட்பளா் மாதையன், 25-ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் பாரதி, 28-ஆவது வாா்டில் முன்னாள் காங்கிரஸ் கட்சி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.மனோகரன், அதே வாா்டில் திமுக வேட்பாளா் சிவகுமாா், 41-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் தா.சுகுமாரன் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை (பிப்.4) வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் மேலும் அதிகம் போ் வேட்புமனு தாக்கல் செய்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.