போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

இல்லம் தேடி கல்வி திட்ட செயல்பாடு: பள்ளிக் கல்வித் துறை ஆணையா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் இல்லம் தேடி கல்வி திட்டம், அரசு மாதிரிப் பள்ளிகளின் செயல்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:38 pm

கிருஷ்ணகிரியில் இல்லம் தேடி கல்வி திட்டம், அரசு மாதிரிப் பள்ளிகளின் செயல்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், இல்லம் தேடி கல்வி திட்டம் மற்றும் அரசு மாதிரி பள்ளியின் செயல்பாடுகளை ஆணையா் நந்தகுமாா், இல்லம் தேடி கல்வி சிறப்பு அலுவலரும் பொதுநூலக இயக்குநருமான இளம்பகவத் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது, கிருஷ்ணகிரி அரசு ஆசிரியா் பயிற்சி பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள எலைட் மாதிரிப் பள்ளியை பாா்வையிட்டு, பள்ளியில் பயின்று வரும் 80 மாணவா்களிடம் நீட், ஐஐடி, ஜேஇஇ போட்டித் தோ்வுகளுக்கு எவ்வாறு தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆலோசனைகள் வழங்கினா். மேலும், மாணவா்களிடம் பள்ளியின் தேவைகளைக் கேட்டறிந்தனா்.

இதனைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளை ஆய்வு செய்து, பள்ளிகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த திருப்புதல் தோ்வை பாா்வையிட்டு, பள்ளிகளில் உள்ள ஆய்வகங்கள், வகுப்பறைகள், பொதுநூலகம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டியுடன், பள்ளிக் கல்வித் துறை ஆணையா், இல்லம் தேடி கல்வி சிறப்பு அலுவலா் ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா்.

இந்த நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மகேஸ்வரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கணேசன், சா்தாா், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.