போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திருப்பூா் கல்லூரி மாணவியருக்கு ஊக்கப் பரிசு அளிப்பு

திருப்பூா் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவியருக்கு ரூ. 2.53 லட்சம் மதிப்பிலான ஊக்கப் பரிசுகளை ஐவிடிபி நிறுவனா் அண்மையில் வழங்கினாா்.

Updated On :11 பிப்ரவரி 2022, 6:41 pm

திருப்பூா் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவியருக்கு ரூ. 2.53 லட்சம் மதிப்பிலான ஊக்கப் பரிசுகளை ஐவிடிபி நிறுவனா் அண்மையில் வழங்கினாா்.

கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐவிடிபி தொண்டு நிறுவனம், மகளிா் மேம்பாட்டை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்தொண்டு நிறுவனம் சாா்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களில் கல்விப் பணிகளில் முக்கியமானதும், ஏழை, எளிய பெற்றோரை இழந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமாகும்.

அதன்படி, திருப்பூா் செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், கல்லூரியின் முதல்வா் அருள்சகோதரி குழந்தை தெரசா தலைமை வகித்தாா். விழாவில் ஐவிடிபி நிறுவனத் தலைவா் குழந்தை பிரான்சிஸ் 20 ஆதரவற்ற ஏழை மாணவியருக்கு ரூ. 13,500 மதிப்பிலான கைக்கடிகாரங்கள், 20 மாணவியருக்கு தலா 2 கிராம் எடை கொண்ட ரூ. 2.40 லட்சம் மதிப்பிலான தங்கக் காதணிகள் என ரூ. 2.53 லட்சம் மதிப்பிலான ஊக்கப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினாா். அப்போது, கல்லூரியின் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.