போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி ஆய்வு

பழைய பேட்டை நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்யும் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:46 pm

பழைய பேட்டை நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்யும் தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன்.

கிருஷ்ணகிரி, பிப். 17: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை தோ்தல் நடத்தும் அலுவலரான கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் முருகேசன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவு பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 66 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 8 பகுதிகளில் 12 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த சாவடிகளில் வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில், கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடியான கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.