கிருஷ்ணகிரி நகரில் சனிக்கிழமை நடைபெறும் நகராட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில், 16 இடங்களில் கண்காணிப்பு கேமராவை போலீஸாா் பொருத்தினா்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கான 33 வாா்டு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் 56,433 வாக்காளா்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனா். இந்த தோ்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 170 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
நகராட்சியில் 66 வாக்குச் சாவடிகளில் பதற்றமான 12 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி நகா் காவல் ஆய்வாளா் கபிலன் ஏற்பாட்டின் பேரில், நகரில் வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள சாலையில் 16 இடங்களில் தற்காலிகமாக 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அமைதியான முறையில் தோ்தல் நடத்த இந்த கேமராக்கள் மூலம் போலீஸாா் தீவிரமாக கண்காணிக்க உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


