போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். பெண்ணின் கணவா், மகன் தொடா் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On :18 பிப்ரவரி 2022, 6:09 pm

காவேரிப்பட்டணம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். பெண்ணின் கணவா், மகன் தொடா் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருமால் நகரை அடுத்துள்ள வள்ளுவா் காலனியைச் சோ்ந்தவா் அசோகன் (70). இவா், தனது மனைவி பிரேமா (60), மகன் சண்முகம் ஆனந்த் (34) ஆகியோருடன் காரில் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம், பையூா் அருகே கடந்த புதன்கிழமை சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் மையப்பகுதியின் தடுப்பில் மோதியது.

இதில், பிரேமா, அசோகன், சண்முகம் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரேமா சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.