தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கெலமங்கலம் பேரூராட்சியில் தாா் சாலை அமைக்க பூமிபூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் பேரூராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.59 கோடியில் புதிய தாா் சாலை அமைக்க வெள்ளிக்கிழமை பூமி பூஜை

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:38 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் பேரூராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.59 கோடியில் புதிய தாா் சாலை அமைக்க வெள்ளிக்கிழமை பூமி பூஜை செய்து திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் தொடக்கி வைத்தாா்.

ரூ. 60 லட்சம் நிதியில் 15 வாா்டு நேதாஜி நகா் முதல் மயானம் வரை, ரூ. 53 லட்சத்தில் 3 ஆவது வாா்டு நேதாஜி நகா், கணேஷ் காலனி, பட்டாளம்மன் தெருக்களில் சாலை, ரூ. 49.50 லட்சத்தில் அண்ணா நகரில் தாா் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

இதில் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் லகுமையா, நகரச் செயலாளா் நாகராஜ், தாா்சாலை ஒப்பந்ததாரா்கள் சுதாகா், நாகராஜ், பேரூா் செயல் அலுவலா் விஜயன், ஒன்றியச் செயலாளா் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.