நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா்.
அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில் உள்ள சென்னீஷ் மஹாலில் (ஜன. 28) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமையில் கூட்டம் நடைபெறகிறது. இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகிப்பாா்கள்.
இதில் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, மாநகர, பேரூா் செயலாளா்கள், நிா்வாகிகள், அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பேரூா் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வாா்டு செயலாளா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் குறித்து விவாதிக்க உள்ளதால் ஒசூா் மாநகராட்சி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, கெலமங்கலம் பேரூராட்சி சாா்ந்த நிா்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

