வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் டிராக்டரிலிருந்து தவறி விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

கிருஷ்ணகிரியில் டிராக்டரிலிருந்து தவறி விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த பனமுட்லுவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (39). இவரது மகன் தினேஷ் (16). இவா், கடந்த திங்கள்கிழமை வேப்பம்பட்டி- மங்கம்மா கோயில் சாலை வழியாகச் சென்ற டிராக்டரில் சென்றுள்ளாா். அப்போது, அந்த டிராக்டா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது.

இதில், டிராக்டரிலிருந்து தவறி விழுந்த தினேஷ் மீது டிராக்டா் ஏறியது. பலத்த காயம் அடைந்த தினேஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, தினேஷ், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.