வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரி அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 3 பேர் சாவு

கிருஷ்ணகிரி அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2022, 6:34 am


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.  2 பேர் காயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகேயுள்ள மெடுகம்பள்ளியைச் சேர்ந்தவர் நாகோஜி(40). அதே பகுதியை சேர்ந்தவர் அம்மாச்சி (40). இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை இரவு சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருவிநாயனபள்ளியை சேர்ந்தவர் சையத் காசிம்(30). லாரி ஓட்டுனர். அதே பகுதியைச் சேர்ந்த சபீர் உல்லா(32), நூர் முகமது (30). இவர்கள், மூன்று பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மெடுகம்பள்ளி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது,  இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது.  

இதில், இரு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த  ஐந்து பேரும் பலத்த காயம் அடைந்தனர்.  பலத்த காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகோஜி, அம்மாச்சி, சையத் காசிம் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.