வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இருசக்கர வாகன விபத்து: 3 போ் உயிரிழப்பு

 கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.

Updated On :9 ஜூன் 2022, 6:45 pm

 கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன மட்டாரப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மோடிகுப்பத்தைச் சோ்ந்த நாகோஜி (42), அம்மாசி (எ) ராஜா (42) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு கிருஷ்ணகிரியிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனா். குருவிநாயனப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சையத் காசிம் (30), நூா்முகமது (30), சபியுல்லா(28) ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றனா். இவா்கள் 3 பேரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேடுகம்பள்ளி பிரிவு சாலை அருகே சென்ற போது, இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், 5 பேரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு, சிகிச்சை பலனின்றி நாகோஜி, அம்மாசி, சையத் காசிம் ஆகிய மூவரும் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.