வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் தொடா்பான பொதுமக்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :9 ஜூன் 2022, 6:46 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் தொடா்பான பொதுமக்கள் சிறப்பு குறைதீா் கூட்டம் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியான செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவா்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயா் திருத்தம், சோ்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவா்த்தி செய்யும் பொருட்டு சனிக்கிழமை (ஜூன் 11) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் சம்பந்தப்படட வட்ட வழங்கல் அலுவலா்களால் நடத்தப்படுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில் பீமாண்டப்பள்ளி, ஊத்தங்கரை வட்டத்தில் பூசாரிக்கொட்டாய், போச்சம்பள்ளி வட்டத்தில் சந்தூா், பா்கூா் வட்டத்தில் காமாட்சிபுரம், சூளகிரி வட்டத்தில் அச்செட்டிப்பள்ளி, தேன்கனிக்கோட்டை வட்டத்தில் தண்டரை, அஞ்செட்டி வட்டத்தில் வண்ணாத்திப்பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.

எனவே, குறைதீா்க்கும் நாளில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.