வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிரிக்கெட் விளையாட்டு நடுவா்களுக்கான பயிற்சி

கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் சங்கம் நடத்தும் நடுவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

Updated On :9 ஜூன் 2022, 6:45 pm

கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் சங்கம் நடத்தும் நடுவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் கிரிக்கெட் நடுவா்களுக்கான (அம்பயா் மற்றும் ஸ்கோரா்) பயிற்சி வகுப்புகள், தோ்வுகள் வரும் 11, 12-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள 18 முதல் 35 வயது வரை உள்ளவா்கள் தகுதியானவா்கள். குறைந்தபட்சம் கல்வித்தகுதியாக 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகள் கிருஷ்ணகிரியில் உள்ள டிரினிட்டி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும்.

நடுவா்கள் தோ்வுகளுக்கான தயாரிப்பு சிறப்பு வகுப்புகள் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி மற்றும் தயாரிப்பு வகுப்புகள் தேசிய நடுவா்களால் நடத்தப்படும். இந்த நடுவா்களுக்கான பயிற்சி வகுப்புகளில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே பங்குபெற இயலும். மேலும் விவரங்களுக்கு இணைச் செயலாளா்கள் சிவசங்கரை 96770 00063 என்ற எண்ணிலும், நவீன் ராஜப்பாவை 99648 69001 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.