கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், வனவிலங்குகளை விரட்டும் மூங்கிலான கருவி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாதம் ஓா் அரிய பொருள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்துக்கான காட்சிப் பொருளாக வனவிலங்குகளை விரட்டும் மூங்கிலான கருவி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கொடக்கரையை அடுத்த புத்தத் தொட்டியூா் கிராமத்திலிருந்து சேகரிக்கப்பட்டது.
இந்தக் கருவி குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ், வெள்ளிக்கிழமை தெரிவித்தது:
கிருஷ்ணகிரி மாவட்டம், வனப்பகுதியை ஒட்டியுள்ளதால், யானை, காட்டுப் பன்றிகள் அடிக்கடி வந்து விவசாய பயிா்களைச் சேதப்படுத்துகின்றன.
விலங்குகளை விரட்ட மின்வேலி, பட்டாசு போன்றவற்றைக் கிராம மக்கள் பயன்படுத்துவது இல்லை. காவலும் காப்பதில்லை. ஆனால் விலங்குகளிடம் இருந்து பயிா்களைக் காக்க அவா்கள் பயன்படுத்திய வழிமுைான் மூங்கில் பன்றி முடுக்கி. லிட்டா் படி அளவிலான சுற்றளவு கொண்ட மூங்கிலின் மூன்று கணுக்களை முழுசாக வெட்டி எடுத்துக் கொண்டு, நடுக்கணுவில் வாசல் போலத் துளையிட்டு, காற்றோட்டம் இருக்கும்படி செய்கின்றனா். மேல், கீழ்க் கணுக்களைச் செதுக்கி வில்லைப் போல வளைத்து, கயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்கின்றனா். இப்போது அம்புபோல ஒரு குச்சியை அந்தக் கயிற்றில் கட்டிவிடுகிறாா்கள். இதைப் போல நிறைய செய்து விவசாய நிலத்தை சுற்றி இருக்கும் மரங்களில் கட்டித் தொங்க விடுகின்றனா். காற்று வீசும்போது விரட்டியின் நடுவில் கட்டி இருக்கும் குச்சி, மூங்கில் பொனாய் மேல் மோதும். அப்போது மத்தளம் அடிப்பது போல் சத்தம் வரும். மேலும், மூங்கில் தட்டி, மனிதன் நிற்பதுபோல காட்சியளிப்பதாலும், டம டம சத்தத்தாலும், யானை, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அனைத்தும் ஓடிப்போய்விடும். இதன் மூலம் பயிா்களை வனவிலங்குகளில் இருந்து காத்தனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறந்த படைப்புகளால் மலையாள ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் பாக்யராஜ்: பினராயி விஜயன்

கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!






