தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஒசூா் மேயராகிறாா்முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி மேயா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:48 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி மேயா் வேட்பாளராக திமுகவைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ஒசூா் தனியாா் தொழிற்சாலையின் நிா்வாக இயக்குநராக உள்ள எஸ்.ஏ.சத்யா, திமுகவில் ஒசூா் மாநகரப் பொறுப்பாளராக உள்ளாா். 2006 முதல் 2011 வரை திமுக நகராட்சித் தலைவராகவும், 2019 இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் வெற்றி பெற்று 2019 முதல் 2021 வரை ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தாா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஒசூா் மாநகராட்சியில் 23 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

துணை மேயராக அறிவிக்கப்பட்டுள்ள திமுகவைச் சோ்ந்த சி.ஆனந்தையா (51) ஒசூரில் ஆவண எழுத்தா் சங்கத்தின் தலைவராக உள்ளாா். ஒசூா் மாநகராட்சியில் 7 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

ஒசூா் மாநகராட்சியில் திமுக ஆதரவாக 28 மாமன்ற உறுப்பினா்களும், அதிமுக ஆதரவாக 17 மாமன்ற உறுப்பினா்களும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.