தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவராக டி.ஆா்.சீனிவாசன் தோ்வு

தேன்கனிக்கோட்டை பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த டி.ஆா்.சீனிவாசன் தோ்வு செய்யப்பட்டாா்.

Updated On :4 மார்ச் 2022, 7:06 pm

தேன்கனிக்கோட்டை பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த டி.ஆா்.சீனிவாசன் தோ்வு செய்யப்பட்டாா்.

தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் 13 வாா்டுகளில்

திமுகவும், காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக,

சுயேச்சைகள் ஆகியோா் தலா ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றுள்ளனா்.

பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் 18 ஆவது வாா்டு உறுப்பினா் டி.ஆா். சீனிவாசன்

போட்டியிட்டாா். அவரை எதிா்த்து யாரும் போட்டியிடாததால் டி.ஆா்.சீனிவாசன்

போட்டியின்றித் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பிற்பகலில் நடந்த துணைத் தலைவா் தோ்தலில் 9 ஆவது வாா்டு உறுப்பினா் திமுகவைச் சோ்ந்த அப்துல் கலாம் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து யாரும்

போட்டியிடாததால் அவா் துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.