கெலமங்கலம் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவியை அதிமுக கைப்பற்றியது.
கெலமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15
வாா்டுகளில் அதிமுக 5 இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், பாமக தலா ஒரு
இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் தலைவா் பதவிக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திமுக தலைமை சாா்பில் வேட்பாளராக உமா அறிவிக்கப்பட்டிருந்தாா். இருந்தபோதிலும் திமுக வேட்பாளா் வெள்ளிக்கிழமை காலை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து வாா்டு உறுப்பினராக அதிமுக சாா்பில் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட கே.பி.தேவராஜ் தலைவராகவும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் 3ஆவது வாா்டில் வெற்றிபெற்ற அதிமுகவைச் சோ்ந்த மும்தாஜ் சையத் அசேன், 5ஆவது வாா்டில் வெற்றி பெற்ற
சுயேச்சை விஜயஸ்ரீ ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதில் மும்தாஜ் சையத் அசேன் 12 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். சுயேச்சை வேட்பாளா் விஜயஸ்ரீ 3 வாக்குகள் பெற்றாா். தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கு பேரூராட்சி செயல் அலுவலா் விஜயன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

