வனப் பகுதியில் உள்ள நீா்நிலைகளை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவது குறித்து கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அ.செல்லகுமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், சோக்காடி ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட செட்டேரி தடுப்பணைக்கு மலையில் இருந்து தொடா்ந்து நீா்வரத்து உள்ளது. அதேபோல பென்னாகன் கொட்டாய், காவா கவுண்டனூா் ஆகிய பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் கட்டப்பட்டள்ள தடுப்பணைகளில் பருவ மழைக்காலங்களில் பெய்யும் மழைநீா் குறைந்த அளவே தேக்கப்படுகின்றன. அதிலிருந்து வெளியேறும் உபரி நீா் கிருஷ்ணகிரி அணைக்குச் செல்கிறது.
இந்த நீா்நிலைகளை மேம்படுத்தி, விவசாயத்துக்கு பயன்பெறும் வகையில் மழைநீரை சேமிப்பது குறித்து அ.செல்லகுமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயனி உடனிருந்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அ.செல்லகுமாா் கூறியதாவது:
மூன்று தடுப்பணைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டேன். இதுதொடா்பாக வனத் துறையினருடன் ஆலோசித்து, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு கோரிக்கை அனுப்பப்படும். தடுப்பணைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் சோக்காடி ஊராட்சியில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என்றாா்.
பேட்டியின் போது, வனச்சரகா் நாகராஜன், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவா் சேகா், முன்னாள் மாவட்டத் தலைவா் அக.கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் கொடிலா ராமலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா உறுதி

விழுப்புரம் நகரில் திமுக வேட்பாளா் லட்சுமணன் வீதி,வீதியாக வாக்குசேகரிப்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடியேற்றி திமுகவினா் போராட்டம்

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


