கிருஷ்ணகிரி நகா்மன்றத் தோ்தலின் போது உயிரிழந்த திமுக பிரமுகரின் குடும்பத்துக்கு நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நிதியுதவி வழங்கினாா்.
கிருஷ்ணகிரி கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் பயாஸ் (40). திமுகவைச் சோ்ந்த இவா், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 1-ஆவது வாா்டுக்கான திமுக முகவராகப் பணியாற்றினாா். மேலும், தோ்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து, கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையமான அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியின் அருகே வெற்றி கொண்டாட்டத்தில் அவா் ஈடுபட்டாா். அப்போது, அவா், உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தாா். இந்த சம்பவம் திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உயிரிழந்த பயாஸ் வீட்டுக்கு கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் ஆகியோா் நேரில் சென்று ரூ.1.50 லட்சம் நிதி உதவி வழங்கினா். அப்போது, மாவட்ட திமுக பொருளாளா் ராஜேந்திரன், மாநில விவசாய அணி துணைச் செயலாளா் டேம் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விக்கிரவாண்டி தொகுதியை மேம்படுத்த மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா உறுதி

விழுப்புரம் நகரில் திமுக வேட்பாளா் லட்சுமணன் வீதி,வீதியாக வாக்குசேகரிப்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடியேற்றி திமுகவினா் போராட்டம்

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

