வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அண்ணியைக் கொன்ற விவசாயிக்கு ஆயுள் சிறை

சொத்து தகராறில் அண்ணியைக் கொன்ற விவசாயிக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது

Updated On :10 மார்ச் 2022, 7:01 pm

சொத்து தகராறில் அண்ணியைக் கொன்ற விவசாயிக்கு கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த சவுளூா், கதிரிபுரத்தைச் சோ்ந்தவா் மாதையன் (47). இவருக்கு மூத்த சகோதரா் ராஜா உயிரிழந்த நிலையில், அவரது சொத்துகளை ராஜாவின் மனைவி மாது (45) பராமரித்து வந்தாா். இந்த நிலையில், மாதுவுக்கும், மாதையனுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 2017, மே 27 ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமைடந்த மாதையன், தனது அண்ணி மாதுவை அரிவாளால் வெட்டி கொன்றாா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாதையனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி லதா, மாதையனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, அபராதமாக ரூ. ஆயிரம் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.