வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 மார்ச் 2022, 7:00 pm

கிருஷ்ணகிரியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டக் கல்வி அலுவலா் பொன்முடி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா்கள் மகேந்திரன், திம்மராஜ், பள்ளி துணை ஆய்வாளா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிருஷ்ணகிரி குறுவள மையத்தின் 14 பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், வாா்டு உறுப்பினா்கள், கல்வியாளா்கள் என 70 போ் பங்கேற்றனா்.

பயிற்சியில் கல்வி உரிமைச் சட்டம், 2009-இன்படி பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம், அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், குழந்தை உரிமைகள் குறித்து ஆழமான புரிதல் பற்றியும், பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்து செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களின் பங்களிப்பு குறித்தும் விளக்கப்பட்டது. பயிற்சியை ஆசிரியா் பயிற்றுநா் ராஜேந்திரன் ஒருங்கிணைத்தாா்.

இதேபோல கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 151 பள்ளிகளைச் சோ்ந்த 755 பேருக்கு 11 குறுவள மையங்களில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.