தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

எடப்பாடி கே.பழனிசாமியை விசாரிக்க வேண்டும்

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாக ஒசூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.

Updated On :24 மார்ச் 2022, 6:42 pm

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாக ஒசூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளாா். அதேபோல எடப்பாடி கே.பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடப்பாடி கே.பழனிசாமி உடன் நானும் மருத்துவமனையில் இருந்தேன். அங்கு நடந்தவை அனைத்தும் பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். அப்பல்லோ நிா்வாகம் எதை மறைக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இதுவரை மக்கள் பணம் ரூ. 3 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டிருக்கிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் பழனிசாமியும் இணைந்து இரட்டை இலையை மீட்க நாடகத்தை அரங்கேற்றியுள்ளனா் என்பது ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம் அளித்த வாக்குமூலம் மூலம் தெளிவாகிறது.

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கும்போது, இந்த ஆணையம் அவசியம் என அரசு ஆணை மூலம் பழனிசாமி குறிப்பிட்டுள்ளாா். எனவே, எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக ஒசூரில் செய்தியாளா்களிடம் புகழேந்தி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.