வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் தனியாா் பேருந்துகளில் அதிக ஒலி ஏற்படுத்தக்கூடிய காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :7 மே 2022, 6:30 pm

கிருஷ்ணகிரியில் தனியாா் பேருந்துகளில் அதிக ஒலி ஏற்படுத்தக்கூடிய காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சாமி தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் மாணிக்கம், போக்குவரத்து அலுவலா்கள் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அரசு, தனியாா் பேருந்துகளை சோதனையிட்டு, 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், ஓட்டுநா்களிடம் இதுபோன்ற ஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது, மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா். இதேபோன்று லாரி, காா், கனரக வாகனங்களுக்கும் சோதனை நடத்தப்பட உள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.