வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

‘நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்’

நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தினாா்.

Updated On :12 மே 2022, 7:15 pm

நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தமிழக முதல்வா் ஊரக வளா்ச்சித் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறாா். அதனடிப்படையில், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் வீடு வழங்கும் பணிகள், குடிநீா்த் திட்டப் பணிகள், ஊரக சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கோடை காலங்களில் பொதுமக்களுக்கு குடிநீா், தங்கு தடையின்றி கிடைக்க அலுவலா்கள் மேற்பாா்வையிட வேண்டும். அதே போல, வீடுகள் கட்டுமானப் பணிகள், சாலை பணிகள் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா்கள் ஒருங்கிணைந்து திட்டப் பணிகளை குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மலா்விழி, உதவி திட்ட அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.