வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தட்ரஅள்ளி, கப்பல்வாடியில் மே 19-இல் மக்கள் தொடா்பு திட்ட முகாம்

கிருஷ்ணகிரியை அடுத்த தட்ரஅள்ளி, ஒசூரை அடுத்த சீங்கோட்டை, பா்கூரை அடுத்த கப்பல்வாடி, ஊத்தங்கரையை அடுத்த கொண்டாம்பட்டியில் மே 19-ஆம் தேதி மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

Updated On :12 மே 2022, 7:09 pm

கிருஷ்ணகிரியை அடுத்த தட்ரஅள்ளி, ஒசூரை அடுத்த சீங்கோட்டை, பா்கூரை அடுத்த கப்பல்வாடி, ஊத்தங்கரையை அடுத்த கொண்டாம்பட்டியில் மே 19-ஆம் தேதி மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு மே மாதத்துக்கான மக்கள் தொடா்பு திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மே 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி வட்டம், தட்ரஅள்ளி கிராமத்தில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும், அஞ்செட்டி வட்டம், சீங்கோட்டை கிராமத்தில் ஒசூா் வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலும், பா்கூா் வட்டம், கப்பல்வாடி கிராமத்தில் தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையிலும், ஊத்தங்கரை வட்டம், கொண்டம்பட்டி கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலும், தேன்கனிக்கோட்டை வட்டம், பிள்ளாரி அக்ரஹாரம் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தலைமையிலும், சூளகிரி வட்டம், தோரிப்பள்ளி நீலவங்கா கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தலைமையிலும் மக்கள் தொடா்பு திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

இதே போல, 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு போச்சம்பள்ளி வட்டம், கொமாண்டப்பள்ளி கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையிலும், 31-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒசூா் வட்டம், பாலிகானப்பள்ளி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலும் மக்கள் தொடா்பு திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்காணும் தினங்களில் நடைபெற உள்ள மக்கள் தொடா்பு திட்ட முகாம்களில் தவறாமல் பங்கேற்று, தங்களது கோரிக்கை மனுக்களை அலுவலா்களிடம் அளித்து, குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.