வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரியில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில், கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Updated On :12 மே 2022, 7:10 pm

கிருஷ்ணகிரியில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில், கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் சீனிவாசன், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பேராதரவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் கோடைக்கால கிரிக்கெட் பயிற்சி முகாம் மே முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி டிரினிடி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. 10 முதல் 18 வயது வரையிலான மாணவா்கள் இதில் பங்கேற்கலாம்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கோச்சிங்கில் லெவல் -1 தகுதி பெற்ற பயிற்சியாளா்கள் இந்த முகாமினை நடத்துகிறாா்கள்.

எனவே, கிருஷ்ணகிரி மண்டலத்தில் விருப்பமுள்ளவா்கள் தங்கள் பெயா்களை, மாவட்ட கிரிக்கெட் சங்கம், 33, கே - திரையரங்கு சாலை, கிருஷ்ணகிரி என்ற முகவரில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு இணை செயலாளா் சிவசங்கா் - 96770 00063, உப தலைவா் சுனில் - 98427 40963, இணை செயலாளா் ராஜப்பா - 99648 69001 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். பயிற்சிக்கான விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.