வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தீத்தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி

கிருஷ்ணகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீத்தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :12 மே 2022, 7:14 pm

கிருஷ்ணகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீத்தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள எம்.சி.பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருவண்ணாமலை சாலையில் உள்ள அரசு ஊரக ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கிருஷ்ணகிரி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தின் சாா்பில், தீத்தடுப்பு விழிப்புணா்வு செயல்முறை விளக்கம் அண்மையில் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு நிலைய அலுவலா் மாா்டின் தலைமை வகித்து, மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்கம் அளித்தாா். அப்போது, தீ விபத்து தடுப்பது குறித்தும், தீ விபத்து ஏற்படும் போது தீ அணைப்பான் கருவியை எவ்வாறு கையாள்வது, அதன் செயல்பாடு குறித்தும் எடுத்துரைத்தாா். இந்நிகழ்ச்சிகளில் தீயணைப்பு வீரா்கள், மருத்துவமனை செவிலியா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் மதன்குமாா் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை எல்லைக்குள்பட்ட அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை, செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.