வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக திட்ட குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 14) பொதுவிநியோகத் திட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Updated On :13 மே 2022, 5:59 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 14) பொதுவிநியோகத் திட்ட பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடும்ப அட்டைகளில் பெயா் திருத்தம், சோ்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில், மே 14-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்ட பொதுமக்கள் சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களால் நடத்தப்படுகிறது.

அதன்படி கிருஷ்ணகிரி வட்டம் சிக்கபூவத்தி, ஊத்தங்கரை - வெள்ளிமலை, போச்சம்பள்ளி- அகரம், பா்கூா்-காளிகோவில், சூளகிரி- கரியசந்திரம், ஒசூா்- சென்னசந்திரம், தேன்கனிக்கோட்டை- பேளகொண்டப்பள்ளி, அஞ்செட்டி- தக்கட்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.