வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அரசு அருங்காட்சியகத்தில் கோடைக்கால இலவச கலைப் பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவசஅரசு அருங்காட்சியகத்தில் கலைப் பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

Updated On :13 மே 2022, 5:59 pm

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவ, மாணவிகளுக்கு இலவசஅரசு அருங்காட்சியகத்தில் கலைப் பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சிய காப்பாட்சியா் கோவிந்தராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வோா் ஆண்டும் மே 18-ஆம் தேதி, சா்வதேச அருங்காட்சியக தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மே 16 முதல் 19-ஆம் தேதி வரையில் நான்கு நாள்களுக்கு, பள்ளி மாணவ, மாணவியருக்கு கோடைக்கால இலவச கலைப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சி முகாமில், அடிப்படை ஓவியம், யோகாசனம், களிமண் மற்றும் சாக்பீஸ் சிற்பங்கள் செய்தல் ஆகியவை கற்றுத்தரப்படும்.

இந்தப் பயிற்சி முகாமானது காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். பயிற்சியை நிறைவு செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சி பெற விருப்பம் உள்ள மாணவ, மாணவியா் அருங்காட்சியகத்திற்கு நேரிலோ அல்லது 9445288576 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.