ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கிருஷ்ணகிரி அருகே தண்ணீர் தொட்டியில்  மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

கிருஷ்ணகிரி அருகே உள்ள பிஜி புதூரை சேர்ந்தவர் முனியப்பன்.  இவரது மகன் விக்னேஷ் (14). அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :26 மே 2022, 9:49 am

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள பிஜி புதூரை சேர்ந்தவர் முனியப்பன்.  இவரது மகன் விக்னேஷ் (14). அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் விக்னேஷ், எம்.சி.பள்ளி பிரிவு சாலைக்கு நண்பருடன் சென்றார். அங்கு மோகன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து பாசனத்திற்கு நீர் பாய்ந்துக்கொண்டிருப்பதை கண்ட விக்னேஷ், தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்தார். 

அப்போது, அங்குள்ள மின் கம்பத்திலிருந்து மின் கம்பி துண்டாகி தண்ணீர் தொட்டியில் விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து விக்னேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  

தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து மகாராஜ கடை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.