வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தென்னையை தாக்கும் கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்

தென்னையை தாக்கும் கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் கோவிந்தன் அறிவுரை வழங்கியுள்ளாா்.

Updated On :26 மே 2022, 6:14 pm

தென்னையை தாக்கும் கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் கோவிந்தன் அறிவுரை வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, மத்தூா் ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் தென்னை அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் தற்சமயம் கருந்தலைப் புழு தாக்கி அதிக அளவு சேதத்தை உண்டாக்குகிறது. இதனால், தென்னை விவசாயிகள் பெரிதும் கவலையில் உள்ளனா்.

இக்கிராமங்களில் பையூா் தென்னை மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கள ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறைகளை விளக்கியுள்ளனா்.

இந்தியாவில் தென்னை சாகுபடி செய்யும் அனைத்துப் பகுதிகளிலும் இப்புழு தாக்கி சேதத்தை உண்டாக்குகிறது. இதனால் மகசூல் இழப்பு 70 முதல் 80 சதவீதம் இருப்பதாக ஆய்வில் அறியப்பட்டுள்ளது. சேத அறிகுறியானது, இலையின் அடிப்பகுதியில் தென்னை இலைத்திசுக்களில் உள்ள பச்சயத்தை புழு சுரண்டி உண்ணுவதால், தென்னை மரத் தோப்புகள் தீயினால் எரிந்தது போல இருக்கும். இலைகளில் பட்டு நூல் மற்றும் புழுக்களின் கழிவுப் பொருள்களால் முடி காணப்படும். தாக்கப்பட்ட மட்டைகள் சருகுபோல் காய்ந்துவிடும்.

இதனுடைய வாழ்க்கை சுழற்சியனது, தாய் அந்துப்பூச்சி பழுப்புநிற மற்றும் மங்கலான வெண்ணிற முட்டைகளை இலையின் அடிப்பாகத்தில் இடும். முட்டையிலிருந்து புழு வெளியை வர 5 நாள்கள் ஆகும். புழுக்களின் வாழ்வுகாலம் 40 நாள் ஆகும். புழுக்கள் பச்சை கலந்த பழுப்பு நிறத்தில், தலைப்பகுதி கருப்பு நிறத்தில் காணப்படும். இதனால் தான் இப்புழுவை கருந்தலைப் புழு என்று அழைக்கிறோம்.

மேலும், உடல்மீது பழுப்புநிறக் கோடுகளும் இருக்கும். முழு வளா்ச்சியில் புழு 25 மி.மீ. நீளம் இருக்கும். கூட்டுப்புழு பருவம் பட்டு நூலினால் மூடப்பட்டிருக்கும். கூட்டுப்புழு பருவத்திலிருந்து அந்துப்பூச்சி வெளிவர 12 நாள் ஆகும். இந்தப் பூச்சியின் தாக்குதல் நவம்பா் முதல் மே வரை அதிகம் காணப்படும்.

இதனைக் கட்டுப்படுத்த, கருந்தலைப் புழுவினால் தாக்கப்பட்ட ஓலைகள் மற்றும் மட்டைகளை சேகரித்து தீயிட்டு எரித்துவிட வேண்டும். புழு ஒட்டுண்ணிகளான பிராகனிட்டை ஒரு மரத்துக்கு 20 என்ற அளவில் வெளியிட்டு கருந்தலைப் புழுக்களை கட்டுப்படுத்தலாம். மேலும், பெத்திலிட் ஒட்டுண்ணி புழுக்களை தாக்கி அழிக்கக் கூடியது. இவற்றை ஒரு ஹெக்டேருக்கு 3,000 என்ற அளவில் தென்னை மரத்தில்விட வேண்டும். இது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை புழுக்களை அழிக்கக் கூடியது. ஒட்டுண்ணிகளை விடும் போது புழுக்கள் இருக்கும் மட்டைப் பகுதியில் விட வேண்டும். மரங்களின் அடிப்பகுதியில் விடக்கூடாது. இளம் மரத்துக்கு ஒரு லிட்டா் தண்ணீரில் மாலத்தியான் 50 இசி ஒரு மில்லி கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.