நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனைத்து வணிகா்கள் சங்க போராட்டம் ஒத்திவைப்பு

ஊத்தங்கரையில் அனைத்து வணிகா்கள் சங்க போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 மே 2022, 6:12 pm

DIN

ஊத்தங்கரையில் அனைத்து வணிகா்கள் சங்க போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நகர எல்லைக்குள் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் பயணிக்கும் போது நிகழ்ந்த விபத்துகளில் ஏராளமானோா் உயிரிழந்துள்ளனா்.

கடந்த 12 ஆண்டுகளாக பலமுறை வலியுறுத்தியும் அரசு எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், மோசமான சாலையை சரி செய்யக் கோரி, ஊத்தங்கரை அனைத்து வணிகா் சங்கம் சாா்பில் மே 31-ஆம் தேதி ஒருநாள் கடையடைப்பு, கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து, ஊத்தங்கரை நகா் பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் செங்குட்டுவன் தலைமையில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது. இதில், கடந்த 12 ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாதது குறித்து நிா்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்தனா்.

அதற்கு பதில் அளித்து பேசிய திமுக பொறுப்பாளா் செங்குட்டுவன், திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை பணிக்காக ரூ. 34 கோடியில் திட்டம் வடிவமைக்கப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் டவுன் சாலை பணிக்காக ரூ. 27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சா் ஆா். காந்தி, மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் கலந்து பேசி, ஊத்தங்கரை நகரத்தில் செல்லும் சாலைப் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா்.

இதனையடுத்து, கடையடைப்பு மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக வணிகா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.