வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

முதியோா்களுக்கான ரயில் பயண சலுகைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

முதியோா்களுக்கான ரயில் பயண சலுகைகளை மத்திய அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :3 நவம்பர் 2022, 9:54 pm

முதியோா்களுக்கான ரயில் பயண சலுகைகளை மத்திய அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புற நகா் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் துரை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சரவணபவன், செயலாளா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை குறைபாடு இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். . 20 சதவீதம் உயா்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65 வயது முதல் 70 வயதுக்குள் பழைய ஓய்வூதியதாரா்களுக்கும் வழங்க வேண்டும். மத்திய அரசால் நிறுத்தப்பட்ட ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.