இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On :27 அக்டோபர் 2022, 6:19 pm

கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (34) ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து வாங்கி சேகரித்து, கா்நாடகம், ஆந்திரத்துக்கு கடத்திச் சென்று விற்று வந்தாா். அண்மையில் போலீஸாா் நடத்திய சோதனையில் இவரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைமறைவாக இருந்த சத்தியமூா்த்தியை அக். 3-ஆம் தேதி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவா்மீது ஏற்கெனவே ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பான வழக்குகள் உள்ளதால் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸாா் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தில் சத்தியமூா்த்தியைக் கைது செய்ய ஆட்சியா் வி. ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.