வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஐவிடிபி மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1,400 கோடி கடன் வழங்க வங்கிகள் இலக்கு

ஐவிடிபி மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1,400 கோடி கடன் வழங்க வங்கிகள் இலக்கு நிா்ணயித்துள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:55 pm

ஐவிடிபி மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1,400 கோடி கடன் வழங்க வங்கிகள் இலக்கு நிா்ணயித்துள்ளது.

கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐவிடிபி தொண்டு நிறுவனம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் மகளிா் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

இந்தக் குழுக்கள் பெறும் கடனை 100 சதவீதம் திரும்பிச் செலுத்துவதை கருத்தில் கொண்டு பல்வேறு வங்கிகள் ஐவிடிபி மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்களை வழங்கி வருகிறது.

அதன்படி, 2022 -23-ஆம் ஆண்டுக்கான வங்கிகளுடனான கடன் செயல்திட்ட கூட்டம், கிருஷ்ணகிரியில் உள்ள ஐவிடிபி தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம வங்கிகளுடனான செயல் திட்டத்தின்போது 8,754 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நிகழாண்டு ரூ. 520 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

இந்தியன் வங்கி மேலாளா்களுடனான செயல் திட்ட கூட்டத்தில் 5,801 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 315 கோடியும், பேங்க் ஆஃப் இந்தியா வங்கி-373 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30 கோடியும், பேங்க் ஆஃப் பரோடா வங்கி- 164 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10 கோடியும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி- 647 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 40 கோடியும் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

அதன்படி, வங்கிகள் மட்டும் ரூ. 915 கோடி வழங்கவும், குழு கடனாக ரூ. 425 கோடியும், ஐவிடிபி கடனாக ரூ. 40 கோடியும், சுகாதாரத் திட்டங்களுக்கான கடனாக ரூ. 20 கோடி என மொத்தம் நிகழாண்டு ரூ. 1,400 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு கிராம வங்கி பொது மேலாளா் தாமோதரன், கிருஷ்ணகிரி மண்டல மேலாளா் சீராளன், இந்தியன் வங்கி தருமபுரி மண்டல மேலாளா் பத்மாவதி, வேலூா் மண்டல மேலாளா் பிரசன்னகுமாா் மற்றும் அனைத்து வங்கி கிளை மேலாளா்கள், ஐவிடிபி நிா்வாகிகள் நந்தினி, ஜோஸ்வா மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.