கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வியாழக்கிழமை டிராக்டா் பேரணியில் ஈடுபட்டனா்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி டிராக்டா் பேரணி நடத்தினா். கிருஷ்ணகிரி, பழையபேட்டை காந்தி சிலை அருகே தொடங்கிய பேரணிக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினா் கண்ணு தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத் தலைவா் லகுமய்யா, மாவட்ட ஒருகிணைப்பாளா் பழனி, மாநில குழு உறுப்பினா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். வறட்சி, வெள்ளம், அதிக மழை, பயிா் சாா்ந்த நோய்கள் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய அனைத்து பயிா்களுக்கும் விரிவான மற்றும் பயனுள்ள பயிா் காப்பீட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.
நடுத்தர, சிறு, குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கும் உழவா் ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப் பேரணி நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் முக்கிய சாலைகள் வழியாக சென்று மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பேரணி நிறைவு பெற்றது.
ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நான்குமுனை சந்திப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க வட்டச் செயலாளா் அண்ணாமலை தலைமை வகித்தாா். சிபிஎம் கட்சியின் மாவட்டச் செயலாளா் நஞ்சுண்டன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் கோவிந்தசாமி, சிபிஎம் கட்சி வட்டச் செயலாளா் மகாலிங்கம், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளா் ஜெ.எஸ்.ஆறுமுகம், விசிக நிா்வாகிகள் அசோகன், குபேந்திரன், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சபாபதி, முத்துக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களைத் திரும்பப் பெற கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பென்னாகரம்
பென்னாகரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சாா்பில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளைக் கண்டித்து வாகன பேரணி நடைபெற்றது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சாா்பில் நடைபெற்ற இருசக்கர, நான்கு சக்கர வாகன பேரணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளரும், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளருமான சோ.அா்ஜுனன் தலைமை வகித்தாா். வாகன பேரணியானது பென்னாகரம் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இருந்து வட்டாட்சியா் அலுவலகம், கடைவீதி, பழைய பேருந்து நிலையம், முள்ளுவாடி, புதிய பேருந்து நிலையம் வழியாக அம்பேத்கா் சிலை வரை 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட டிராக்டா்களுடன் பேரணியாகச் சென்றனா்.
அப்போது சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் குமாா், மாவட்டத் துணைச் செயலாளா்கள் ஆ.ஜீவானந்தம் ,அன்பு சக்கரைவேல், சிபிஐ எம்எல் மாவட்ட செயலாளா் கோவிந்தசாமி, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமாா், இணை ஒருங்கிணைப்பாளா் கோபிநாத், மக்கள் அதிகாரம் அன்பு, பெண்கள் ஒருங்கிணைப்பு குழு ரங்கநாயகி, சிபிஐ பகுதி குழு செயலாளா்கள் ரவி, சக்திவேல், ஆா்.சின்னசாமி, விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்ட பொருளாளா் எம்.சிவா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

