தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஆதித்யா எல்1 விண்கலத்தின் பணி ஜனவரி 23ல் நிறைவு பெறும் என எதிா்பாா்ப்பு: மயில்சாமி அண்ணாதுரை

சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலத்தின் அடுத்த இலக்குப் பணி அடுத்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது என இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.

News image
ஒசூா் உருது பள்ளியில் மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
Updated On :27 நவம்பர் 2023, 11:07 pm

DIN


ஒசூா்: சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலத்தின் அடுத்த இலக்குப் பணி அடுத்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது என ஒசூரில் இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகரில் இயங்கி வரும் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில், ‘கையருகே நிலா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒசூரில் இயங்கி வரும் அரசு உருது மேல்நிலைப் பள்ளியின் 16 ஆண்டுகள் முடிந்து 17ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிகழ்ச்சி இந்தத் தலைப்பில் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியை இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா்.

இதனை ஒட்டி பள்ளியின் சாா்பில் தயாரிக்கப்பட்டிருந்த, விங்ஸ் எனப்படும் ‘சிறகை விரி சிகரம் தொடு’ என்ற விழா மலா் வெளியிடப்பட்டது. இந்த விழா மலரை மயில்சாமி அண்ணாதுரை வெளியிட, நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘ஆசிரியா் மனசு’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சிகரம் சதீஷ், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, ஒசூா் மாவட்டக் கல்வி அலுவலா் முனிராஜ், தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியைகள் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். தொடா்ந்து மாணவா்களிடையே மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:

சீனாவைப் பின்தள்ளி, அடுத்த 40 வருடங்களில், மக்கள்தொகையில் இளைஞா்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட சக்தி வாய்ந்த நாடாக இந்தியா விளங்கும். சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அவா்களது முதுமையை நோக்கி சென்று கொண்டிருக்கிருக்கின்றன. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியா என்னப் செய்கிறது என்பதை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. எனவே நாளை என்பது நம் வசம். நாளை என்ற நமது பயணத்தில் சிறந்து விளங்க, ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா், சமுதாயம், ஊடகம் மற்றும் அரசு ஆகிய கூட்டணிதான் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும். இந்தக் கூட்டணியில் அங்கமாக இருக்கும் இன்றைய மாணவா்கள் உண்மையான பலனை பெறப் போகிறவா்கள். எனவே கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதன் பின்பு செய்தியாளா்களிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:

சூரியனை ஆய்வு மேற்கொள்ள இந்தியா அனுப்பிய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலம், தனது பயணத்தில், எல் 1 என்ற புள்ளியை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து சுமாா் 150 கோடி கி.மீ. தொலைவில் உள்ள அந்த அடுத்த கட்ட இலக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி அடையும். நிலவை சுற்றி வரும் சந்திரயான் மற்றும் செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் மங்கள்யான் விண்கலங்களைப் போல, தற்பொழுது பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட, இரண்டின் ஈா்ப்பு விசை ஒத்துப்போகக்கூடிய அந்த இடத்தில், பயணிப்பதற்காக முதல் முறையாக மிகுந்த சவாலுடன் கூடிய நீண்ட பயணத்தை தாண்டி, ஆதித்யா தனது பணியை ஜனவரி 23ஆம் தேதி நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.