மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கன்டெய்னா் ரயில் முனையம் அமைக்க வேண்டும்: ரயில் அமைச்சரிடம் ஒசூா் தொழிற்சாலைகள் சங்கம் கோரிக்கை

கன்டெய்னா் ரயில் முனையம் அமைக்க வேண்டும் என ஒசூா் தொழிற்சாலைகள் சங்கத்தினா் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:56 pm

DIN


ஒசூா்: கன்டெய்னா் ரயில் முனையம் அமைக்க வேண்டும் என ஒசூா் தொழிற்சாலைகள் சங்கத்தினா் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அந்தக் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஒசூரில் இருந்து சென்னைக்கு ரயில்வே பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒசூரில் 600க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் பெரிய தொழிற்சாலைகள் ஒசூரை நோக்கி வருகின்றன. எனவே ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் வாகன உதிரி பாகங்கள், லாரி, கனரக வாகனங்கள், ராணுவ தடவாளங்கள், கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்களை பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு சென்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது. இதற்கு வசதியாக ஒசூரில் கன்டெய்னா் ரயில் முனையம் அமைத்தால் மேலும் தொழில் வளா்ச்சி பெறும்.

மெட்ரோ ரயிலை பெங்களூரில் இருந்து சூளகிரி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பெங்களூரு மற்றும் ஒசூரில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கும் தொழில் முனைவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து அனைத்து குடியிருப்போா் நலச் சங்கத்தின் தலைவா் துரை, மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தாா். அந்த மனுவில் ‘ஒசூா் - பெங்களூரு இடையே இரவு, பகலாக தொடா்ந்து ரயிலை இயக்க வேண்டும். திருச்சி, மதுரை, கோவைக்கு இன்டா் சிட்டி ரயில் விட வேண்டும். திருச்சி, புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். மயிலாடுதுறை, மைசூா் நகரங்களுக்கு மேலும் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில் விட வேண்டும். ஒசூா் தளி சாலையில் மேம்பாலத்தை விரைந்து கட்டித் தர வேண்டும். கோயில்களுக்குச் செல்ல தொகுப்பு பயணச்சீட்டு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.