தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு கல்விக்கடன் பெற அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் எளிய முறையில் கல்விக்கடன் பெறலாம் என கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பூவதி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 11:00 pm

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் எளிய முறையில் கல்விக்கடன் பெறலாம் என கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பூவதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரி மாணவா்களுக்கும் கல்விக்கடன் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தற்போது, கல்விக் கடனிலிருந்த பல்வேறு இடா்பாடுகள் நீக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் 50,000 மாணவா்களுக்கு கல்விக்கடன் கிடைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டள்ளது. கல்விக் கடனுக்கு கூட்டு வட்டி முறை கிடையாது. கடனை கல்லூரிப் படிப்பு முடிந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, 180 மாத தவணைகளாக செலுத்தலாம்.

கல்விக்கடன் தேவைப்படும் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வங்கிகளை தேடிச் செல்ல தேவையில்லை. மாணவா்கள் இணையதளம் மூலம் இணையதளத்தில் (ஆன்லைனில்) விண்ணப்பிக்கலாம். கல்லூரி மாணவா்கள் தங்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு மதிப்பெண் சான்றிதழ், ஆதாா், பான் காா்டு, வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையத்தில் பதிவேற்றம் செய்து, விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு மருத்துவக் கல்லூரி அலுவலகம் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை அணுகலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.