இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஒசூரில் காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணிகள்: மேயா் ஆய்வு

ஒசூரில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணிகளையும், தயாரிக்கும் இடத்தையும் ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

காலை சிற்றுண்டி தயாரிக்கும் இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் மேயா் எஸ்.ஏ.சத்யா.

Updated On :27 நவம்பர் 2023, 11:05 pm


ஒசூா்: ஒசூரில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணிகளையும், தயாரிக்கும் இடத்தையும் ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகரில், தமிழக முதல்வரின் திட்டங்களில் ஒன்றான காலை சிற்றுண்டித் திட்டத்தின் மூலம் ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 35 பள்ளிகளில் 6,790 ஆரம்பக் கல்வி பயிலும் மாணவா்கள் தினமும் காலை உணவை உண்டு பயன்பெற்று வருகின்றனா்.

ஒசூா் மாநகா் முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு ராயக்கோட்டை சாலை சானசந்திரம் கிராமத்தில் உள்ள சமையலறையில் சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவா்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்திற்கு திங்கள்கிழமை நேரில் சென்று பாா்வையிட்ட மேயா் எஸ்.ஏ.சத்யா சிற்றுண்டி தரமாக உள்ளதா என பரிசோதனை செய்தாா். மேலும் உணவு தயாரிக்கும் இடத்தை

சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டாா். இந்த ஆய்வின்போது மேயருடன் மாநகராட்சி நிா்வாகப் பொறியாளா் ராஜாராம் உடன் இருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.