கா்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்று வாக்களிப்பதற்காக ஒசூரில் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருந்தனா்.
வெள்ளிக்கிழமை ஏராளமான கா்நாடக வாழ் தமிழா்கள் ஒசூருக்கு வந்து அங்கிருந்து பேருந்துகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சொந்த ஊருக்கு சென்றனா்.
ஒசூா் பகுதிகளில் வாழும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தமிழகத்தில் உள்ள வேலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தங்களது சொந்த ஊா்களுக்கு பேருந்துகளில் சென்றனா். ஒசூா் பேருந்து நிலையத்திற்கு வந்த போது மக்கள் அங்கு போதிய அளவில் பேருந்துகள் இல்லாமல் கடும் அவதி அடைந்தனா். தனியாா் பேருந்துகளில் அதிக அளவு கட்டணங்கள் வசூல் செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினா். வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணி வரையிலும் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் தொடா்ந்து காணப்பட்டது.
படவரி...
ஒசூா் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள்.
தொடர்புடையது

விபத்து இழப்பீடு வழங்காததால் கா்நாடக மாநில அரசுப் பேருந்து ஜப்தி

ஒசூா் அருகே ரியல் எஸ்டேட் அதிபா் கொலை வழக்கில் பிடிபட்ட 10 போ் கா்நாடக போலீஸாரிடம் ஒப்படைப்பு

கோவை பேருந்து நிலையத்தில் நடனமாடிய யூடியூபருக்கு சம்மன்!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


