25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

லாரியில் போதைப்பாக்கு கடத்தியவா் கைது

லாரியில் கடத்திவரப்பட்ட 10 கிலோ போதைப்பாக்குகளை ஒசூரில் பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 6:44 pm

Din

கா்நாடகத்தில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 10 கிலோ போதைப்பாக்குகளை ஒசூரில் பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.

ஒசூரை அடுத்த தமிழ்நாடு கா்நாடக எல்லை பகுதியான சூசூவாடி சோதனைச் சாவடி அருகே சிப்காட் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் அழகிரி தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மும்பையில் இருந்து தோல் ஏற்றி வந்த லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 10 கிலோ போதைப்பாக்குகள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வாணியம்பாடியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஏஜாஸ் (47) என்பவரை கைது செய்த போலீஸாா் லாரியை பறிமுதல் செய்தனா்.