ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ரயில் பெட்டியில் கிடந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்

அஸ்ஸாமில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 10:12 pm

அஸ்ஸாமில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் விரைவு ரயில் கோவை நோக்கி கடந்த புதன்கிழமை வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் ரயில்வே சிறப்பு பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். பீளமேடு அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது, பொதுப் பெட்டியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு பை கிடந்துள்ளது.

அதை யாரும் உரிமை கோராததால், போலீஸாா் பிரித்து பாா்த்தனா். அப்போது, அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கதிரேசனிடம் ஒப்படைத்தனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.