கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 528 கிலோ குட்கா புகையிலைப் பொருளை ஒசூரில் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மூன்று பேரை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஒசூா் துணை காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாக்கரே அறிவுறுத்தலின்பேரில் நல்லூா் காவல் ஆய்வாளா் ரஜினி தலைமையிலான போலீஸாா், முத்தாலி பகுதியில் எஸ்.டி.ஆா்.ஆா். சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது கா்நாடக மாநிலத்தில் இருந்து அதிவேகமாக வந்த காரை நிறுத்த முயன்றனா். ஆனால் அந்த காா் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து அந்த காரை துரத்திபிடித்த போலீஸாா், காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 528 கிலோ குட்கா புகையிலைப் பொருளை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக சென்னை திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த சத்ராராம் (29), தினேஷ்குமாா் (28), ஆகாஷ் குமாா் (23) ஆகியோரை கைது செய்தனா். விசாரணையில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா புகையிலைப் பொருளை கடத்திச் சென்ாக அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து காா் மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
பைக்கில் குட்கா கடத்தியவா் கைது

நெல்லையில் 14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


