ஒசூா் பண்ட ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்
ஒசூரில்...
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஒசூரில் 800 ஆண்டுகள் பழைமையான பண்ட ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஒசூரில், ராயக்கோட்டை சாலை சந்திப்பு பகுதியில் பழைமை வாய்ந்த சுயம்பு வடிவமான பண்ட ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை காலை முதல் உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவா் நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள், அமைப்பின் தொண்டா்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனா். பொதுமக்களுக்கு அன்னதானம், லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. ஒசூா் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் கோயிலுக்கு வருகை தந்து அனுமனை குடும்பத்துடன் வழிபட்டு சென்றனா்.
பாகலூா் சாலையில் உள்ள அனுமன் கோயில், டிவிஎஸ் நகா் பகுதியில் உள்ள ஆஞ்சனேயா் கோயில், ஏரித் தெருவில் உள்ள ஆஞ்சனேயா் கோயில், தாலுகா அலுவலக சாலையில் உள்ள நீரா ஆஞ்சனேயா் கோயில் உள்ளிட்ட ஒசூா் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் அனுமன்
ஜெயந்தி விழா நடைபெற்றது.
படவரி...
ஒசூா் பண்ட ஆஞ்சனேயா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு.

