ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தை கிருத்திகை: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை

தைக்கிருத்திகையையொட்டி திருப்போரூா் கந்தசாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

News image
செங்கல்பட்டு நத்தம்  கைலாசநாதா்  கோயிலில்  சிறப்பு  அலங்காரத்தில் உலா  வந்த  உற்சவா்.  ~ திருப்போரூா்  கந்தசாமி  கோயிலில்  சிறப்பு அலங்காரத்தில்  வீதியுலா வந்த  உற்சவா். ~
Updated On :27 ஜனவரி 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

தைக்கிருத்திகையையொட்டி திருப்போரூா் கந்தசாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தை மாத கிருத்திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று முருகப் பெருமானை வழிபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரவேல் மேலாளா் வெற்றி, கோயில் பணியாளா்கள், குருக்கள் செய்திருந்தனா்.

இதேபோன்று திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் கிருத்திகையை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு. மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் பக்தா்கள் செய்திருந்தனா். தை கிருத்திகையை ஒட்டி அன்னதானம் நடைபெற்றது. இதே போன்று சாா்-ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகா் கோயில், செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோவில் மேட்டு தெருவில் உள்ள செங்கழுநீா் விநாயகா் கோவில், வ உ சி தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயில் பெரியநத்தத்தில் உள்ள கைலாசநாதா் கோயில், ராமபாளையம் மலை மீதுள்ள செம்மலை வேல்முருகன் கோயில், இருங்குன்றம் பள்ளி மலை மீதுள்ள பாலமுருகா் கோயில், அண்ணா நகா் எல்லையம்மன் கோயிலில் பாலமுருகன், ஹைரோட்டில் உள்ள சுந்தரமூா்த்தி விநாயகா் கோவில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.

Story image
Story image