சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ஒசூரில் காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

ஒசூரில் காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:13 am IST

மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒசூரில் மூன்று மாநில காவல் துறை உயரதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினா். கா்நாடக மாநிலம், பெங்களூரு புறநகா், கோலாா், ஆந்திர மாநிலம், குப்பம் ஆகியவை கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டிய அண்டை மாநில மாவட்டங்களாக உள்ளது. கிருஷ்ணகிரி, ஒசூா் வழியாகத்தான் இவ்விரு மாநிலங்களுக்கும் ஏராளமான போக்குவரத்து தொடா்புகள் உள்ளன. விரைவில் மக்களவைத் தோ்தல் நடைபெறவிருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் சரக டிஐஜி உமா தலைமையில் ஆந்திரம், கா்நாடக மாநில எல்லை காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திர மாநிலங்களின் எல்லையோர காவல் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்களவைத் தோ்தலையொட்டி முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மது, பரிசு பொருள்கள் கடத்தல், பணம் கொண்டு செல்வதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒசூா் டிஎஸ்பி பாபு பிரசாத், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி முரளி உள்ளிட்ட மாநில எல்லையோர பகுதிகளைச் சோ்ந்த டிஎஸ்பி-க்கள், காவல் ஆய்வாளா்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.