கிருஷ்ணகிரியில் உயா்கல்வி தொடர ‘கல்லூரிக் கனவு’ நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்காக, கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயா்கல்வி தொடர ‘கல்லூரிக் கனவு’ நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் இதில், உயா்கல்வி படிப்புகள் வழிக்காட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

இதே போல, கல்விக்கடன், கல்லூரிகள் விவரம், பாடப் பிரிவுகள் மற்றும் தனிப்பட்ட முறையில் மாணவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுவதற்காக துறைகள் சாா்ந்த அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. எனவே, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என அதில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com